வணக்கம். அவ்வை தமிழ்ச்சங்கத்தின் வலைதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி !!

அவ்வை தமிழ்ச் சங்கம், தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்புகிறது. மாதம் ஒரு வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்க நினைக்கிறது

எங்கள் முக்கிய குறிக்கோள்

  • அடுத்த தலைமுறையினர்க்கு தமிழ் கலாச்சாரத்தை சங்க நிகழ்ச்சிகள் மூலமாக தெரியப்படுத்துவது.
  • நம்மிடம் ஒளிந்திருக்கும் பல சீரிய திறைமைகளை கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பல சந்தர்ப்பங்களின் மூலமாக வெளிக்கொணர்வது
  • பல உயரிய நோக்கங்களுடன் சமூக பணிகள் செய்வது
  • தமிழ் பண்பாடு,மொழி,கலை மற்றும் தமிழர்களின் நலனிற்காக பாடுபடும் உயர்ந்த உள்ளங்களை கௌரவிப்பது

உறுப்பினர் சேர்க்கை

  • நொய்டா மற்றும் சுற்றுப்பகுதியில் வசிக்கும் தமிழினத்தை சேர்ந்த (தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள்) அனைவருக்கும் இச்சங்கத்தில் சேர அழைப்பு விடுக்கிறோம்.
  • உறுப்பினர் சேர்க்கை பற்றி அறிய +91-9312309186, +91-9811918315 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
  • புதிய உறுப்பினர்கள் தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் கூகுள் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டிக்கொள்கிறோம் .

👨‍👨‍👦‍👦 உறுப்பினர் படிவம்

நிகழ்ச்சிச் சுருக்கம் / Program Dashboard

Curr/Next நாள் இடம் நிகழ்ச்சி புகைப்படம் / காணொளி பார்க்க
Done 15/8/2021 நிகழ்நிலை (ஆன்லைன்) 75 வருட சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி!
  • அணி 1 - நிறைவானதே!
  • அணி 2 - குறைவானதே!
பட்டிமன்ற காணொளி காண இங்கே சொடுக்கவும்
- 5/9/2021 - அவ்வை சிறப்பாசிரியர் விருது! | Avvai's Inspiring Teacher Award! மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்