இன்றைய குறள் மற்றும் செய்தித் தொகுப்பைக் காண இங்கு கிளிக் செய்யவும்"

"தினம் ஒரு குறள்" செய்தி தொகுப்பை தினசரி மின்னஞ்சலில் பெற.. இங்கு க்ளிக் செய்யவும்.

 
 

வணக்கம். அவ்வை தமிழ்ச்சங்கத்தின் வலைதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!!

அவ்வை தமிழ் சங்கம், தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்புகிறது. மாதம் ஒரு வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்க நினைக்கிறது

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முக்கிய குறிக்கோள்

•அடுத்த தலைமுறையினர்க்கு தமிழ் கலாச்சாரத்தை சங்க நிகழ்ச்சிகள் மூலமாக தெரியப்படுத்துவது.

•நம்மிடம் ஒளிந்திருக்கும் பல சீரிய திறைமைகளை கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பல சந்தர்ப்பங்களின் மூலமாக வெளிக்கொணர்வது

•பல உயரிய நோக்கங்களுடன் சமூக பணிகள் செய்வது

•தமிழ் பண்பாடு,மொழி,கலை மற்றும் தமிழர்களின் நலனிற்காக பாடுபடும் உயர்ந்த உள்ளங்களை கௌரவிப்பது

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் பணி பற்றி அவைக் கவிஞர் சத்தியமணி அவர்களின் வரிகள்

அன்று தமிழகத்தில்...இளம்பிராயத்தில்
உதிர்த்த முதற்சொல் அம்மா
உரைத்த முதல் உறவு அப்பா
வடித்த முதற் எழுத்து அகரம்
படித்த முதல் பாட்டு ஆத்திசூடி
கிடைத்த முதல் மரபு அறம் செய விரும்பு..
கற்றது தமிழற் கலை,பண்பாடு,மரபு..
கற்க நிற்க அதற்கு தக.....குறள் மொழியன்றோ
பணி நிமித்தம் இங்கே தலைநகருக்கு புறப்பட்டோம்
புலம் பெயர்ந்ந்து புதுவாழ்வில் சிறப்புற்றோம்
குடும்பம்,வீடு, வாசல் வாகனமுடன் களி ப்புற்றோம்
இருந்தும் ஏதோ இழந்தோம் எனத் தனிப்பட்டோம்
எப்படி நம் தலைமுறைக்கு தருவோம் இச்செல்வங்களை
கற்ற நம் கலை, பண்பாடு, மரபுகளை?
அந்த சந்தம் "அறம் செய விரும்பு" மீண்டும் ஒலிக்க‌
இங்கே அவ்வை தமிழ்ச் சங்கம் பிறந்தது பதில் அளிக்க‌ .
இனி வரும் தலைமுறையும் சொல்லும்
நம் கலை,பண்பாடு,மரபு என்று.. பெருமையாய்
ஆனந்தமாய்...உற்சாகமாய்..அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு சமூகப்பணி - உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு

நீங்கள் உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றிய முறைகள், அதுபற்றிய தகவல் போன்றவைக்கோ, அல்லது உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்ய விரும்பினாலோ தயவு செய்து எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதவும்,

இவ்வலைத்தளம் மற்றும் இச்சங்கம் பற்றிய உங்கள் விமர்சனங்களை improvements@avvaitamilsangam.orgஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும். 
 
 

நொய்டா மற்றும் சுற்றுப்பகுதியில் வசிக்கும் தமிழினத்தை சேர்ந்த மக்களை இச்சங்கத்தில் சேர அழைப்பு விடுக்கிறோம். உறுப்பினர் சேர்க்கை பற்றி அறிய +91-9312309186ல் தொடர்பு கொள்ளவும்.